விமானம் தரையிறங்கும்போது திடீர் விபத்து; 4 பேர் உயிரிழப்பு!

Plane

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமான ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஹோர்ஷூ பே நகரிலிருந்து லூசியானா மாகாணத்துக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

அந்த விமானத்தில் 2பெண்கள் உள்பட விமானியுடன் சேர்த்து மொத்தம் 4 பேர் பயணம் செய்தனர்.

இந்நிலையில் விமானம் ஹூஸ்டன் நகருக்கு அருகே பறந்து சென்றுகொண்டிருக்கும்போது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் விமானத்தை அங்குள்ள விமான நிலையத்தில் இறக்க விமானி முயற்சித்தார். அதன்படி அருகில் உள்ள விமான நிலைய அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு விமானம் தரையிறங்குவதற்கான அனுமதியை பெற்றார்.

இதனையடுத்து விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியபோது சற்றும் எதிர்பாராத வகையில் தரையில் விழுந்து நொறுங்கியது. இதனால் விமானம் சட்டென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

அமெரிக்காவில் சிறு சிறு விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. குறுகிய பாதையில் விமானத்தை தரையிறங்க முயற்சிப்பதும், நாள் பட்ட விமானம் பறந்து கொண்டிருக்கும்போது நடுவானில் பழுது ஏற்படுவதுமே விமான விபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

சாலைகளிலும் ஓடு தளத்திலும் இதுபோன்று விமானம் கீழிறங்கும் போது ஏற்படும் விபத்துக்களில் சிக்கி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் ட்ரம்ப் தலைமையிலான அரசு சிறு விமானங்கள் கீழிறங்கும்போது ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் நாட்பட்ட விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென அமெரிக்க வாழ் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: கடும் போராட்டத்துக்கு பின் அமெரிக்காவுக்குள் நுழைந்த டிக்டாக்!

– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa