அமெரிக்க விண்கலத்துக்கு இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெயர் சூட்டல்!

Kalpana Chawla

அமெரிக்க விண்கலத்துக்கு இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா பெயர் சூட்டி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் கர்னல் என்ற ஊரில் 1961ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி பிறந்தார் கல்பனா சாவ்லா.

ஆரம்ப கல்வியை கர்னலில் உள்ள அரசு பள்ளியில் படித்த கல்பனா சாவ்லா, பஞ்சாப்பில் உள்ள பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் துறையில் கல்விப் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.

அதன்பின் 1984 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தொடர்ந்து கொலராடோ பல்கலைக்கழகத்தில் இரண்டாவது முதுகலைப் பட்டமும், விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

Kalpana chawla

விண்வெளி துறையில் கொடிக்கட்டி பறந்த கல்பனா சாவ்லா கடந்த 2003 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காக, அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கல்பனா சாவ்லா உள்பட 7 விண்வெளி வீரர்களுடன் கொலம்பியா விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு சென்றார். 16 நாட்கள் ஆய்வை முடித்து வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியபோது விண்கலம் எதிர்பாராத விதமாக வானில் வெடித்துச் சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உள்பட ஏழு விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர்.

ஆராய்ச்சிக்காக இன்னுயிர் நீத்த மறைந்த இந்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவாகவும், அவரை கவுரவிக்கும் விதமாகவும், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பொருட்களைக் கொண்டு செல்லும் வர்த்தகரீதியான கார்கோ என்ஜி-14 சைக்னஸ் விண்கலத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. இந்த விண்கலம் 3,629 கிலோ கொண்ட பொருட்களுடன் வரும் 29-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவில் கோடிகளில் புரண்டு கொடிக்கட்டி பறக்கும் 7 இந்தியர்கள்

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa