வெள்ளை மாளிகையில் இந்திய பெண்ணுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கி கெளரவித்த ட்ரம்ப்!

sudha sundar narayanan

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த பெண்ணுக்கு அதிபர் ட்ரம்ப் குடியுரிமையை வழங்கினார்.

இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் உள்ளிட்ட ஐந்து நாடுகளை சேர்ந்த அந்து பேருக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜீனியரான சுதா சுந்தரி நாராயணனும் பங்கேற்றார். அவருக்கு அதிபர் ட்ரம்ப் குடியுரிமைக்கான சான்றிதழை வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து சுதா அமெரிக்க குடிமகளாக உறுதியேற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து பேசிய அதிபர் ட்ரம்ப், “உங்களை அமெரிக்க குடும்பத்திற்கு வரவேற்கிறேன். இது எளிதானது அல்ல. உலகிலேயே, மிகப் பெரிய பொக்கிஷமாக கருதப்படுவது அமெரிக்க குடியுரிமை. இதை பெறுவது கடினம். அதை பெற்றிருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள். இந்திய பெண்மணி சுதா சுந்தரி நாராயணன் மிகவும் திறமையான சாப்ட்வேர் டெவலப்பர். அமெரிக்க குடியுரிமை பெற்ற நீங்கள், இந்த நாட்டு சட்டவிதிகளை பின்பற்ற வேண்டும். தொழில்நுட்ப துறையில் சுதா சுந்தரி நாராயணன் பல பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். அவரது சிந்தனைகளும், பல்வேறு புதிய யோசனைகளும் நிச்சம் ஐடி துறையில் பல்வேறு வளர்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன். ” எனக் கேட்டுக்கொண்டார்.

sudha sundar narayanan

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுதா சுந்தரி நாராயணன், கடந்த 13 ஆண்டுகளாக அமெரிக்காவில் சாப்ட்வேர் டெவலப்பராக பணியாற்றிவருகிறார். இவரது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வரும் சுதா சுந்தரி, திறமையாக பணியாற்றி வருவதாக அதிபர் ட்ரம்பே பாராட்டியது மேடையை அதிர செய்தது.

இதையும் படிக்கலாமே: ஆசியாவைச் சேர்ந்த மிகப்பெரிய ஆண் குளவி அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook- https://www.facebook.com/tamilmicsetusa
FB Group- https://www.facebook.com/groups/usatamilnews/
Twitter – https://twitter.com/tamilmicsetusa