ஏர் கண்டிஷனருக்கு மாற்று வழி! அசத்தும் அமெரிக்க பொறியாளர்கள்

Cooling paint

வீடுகளில் ஏர் கண்டிஷனர் இயந்திரம் இல்லாமலேயே குளுமையை ஏற்படுத்தும் புதிய வசதியை அமெரிக்க பொறியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் புர்டு (purdu) பல்கலைக்கழக பொறியாளர்கள் 6 ஆண்டு உழைப்பில் வெள்ளை பெயின்ட்டை உருவாக்கியுள்ளனர்.

சுவற்றில் இந்த பெயின்ட்டை பூசினால் வீட்டின் உள் பகுதியில் 18 டிகிரி குளுமை நிலவும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குளிர்சாதன இயந்திரம் தேவையில்லை என்பதுடன் மின்சாரமும் மீதமாகும் என இதை உருவாக்கிய பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.

கால்சியம் கார்பனேட் உள்ளிட்ட பல்வேறு வேதிப்பொருட்களை கொண்டு இந்த பெயின்ட் உருவாக்கப்பட்டுள்ளது.

Super-white paint reflects 95.5 percent of sunlight to cool buildings

வெப்பமான நாடுகளில் ஏர் கண்டிஷனர் பயன்பாட்டை குறைக்க இந்த முறை உதவும் எனக் கூறப்படுகிறது. 2050 ஆம் ஆண்டில் உலகளாவிய எரிசக்தி பயன்பாடு 90 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இயற்கையாக குளிர்ச்சியை ஏற்படுத்த இந்த வெள்ளை பெயிண்டை உருவாக்கியுள்ளனர். யாக இருப்பதற்கான வழிகள் வரும் தசாப்தங்களில் மிக முக்கியமானதாக இருக்கும். சூரிய சக்தியின் 80-90 சதவீத வீரியத்தை இந்த பெயிண்ட் கட்டுப்படுத்தும் என சொல்லப்படுகிறது. 200 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள ஒரு வீட்டை இந்த பெயிண்ட் மூலம் குளிரூட்டினால் மாதத்திற்கு 50 டாலர்களை மிச்சப்படுத்தலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அக்ரிலிக் பெயிண்ட் கால்சியம் கார்பனேட் கலவையுடன் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இனி ஏசி வாங்குவதற்கு பதில் இந்த பெயிண்ட்டை அடித்தால் உடல் நலத்துக்கும் நல்லது.

இதையும் படிக்கலாமே:  அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்களிக்கும் இளைஞர்கள்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter