விமான விபத்தில் சிக்கி டார்சன் பட நடிகரும், அவரது மனைவியும் உயிரிழப்பு

Joe Lara

அமெரிக்காவில் விமானம் ஏரியில் விழுந்த விபத்தில், டார்சன் பட நடிகர் ஜோ லாராவும் அவரது மனைவியும் உயிரிழந்தனர்.

“டார்சன்” நடிகர் ஜோ லாரா மற்றும் அவரது மனைவி குரு உள்ளிட்ட 7 பேர் ஒரு விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தனர்.

டென்னசி மாகாணத்தில் இருந்து புறபட்ட சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, நாஷ்வில்லே பகுதியில் உள்ள ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் விமானத்தில் பயணித்த டார்சன் பட நடிகர் ஜோ லாரா அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாரா உட்பட 7 பேரும் உயிரிழந்தனர்.

Tarzan in Manhattan movie poster

விபத்துக்குள்ளான இடத்தில் விடிய விடிய மீட்புப்படையினர் ஈடுபட்டனர். ஆனால் விமானத்தின் பல கூறுகளையும் மனித எச்சங்களையும் கண்டறிந்தன. விபத்துக்குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

1989-ம் ஆண்டு வெளியான ஆக்ஷன் திரைப்படமான டார்சன் இன் மன்ஹாட்டன் ((Tarzan in manhattan)) லாராவுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதனையடுத்து 1996 – 1997 -ம் ஆண்டுகளில் “டார்சன்: தி எபிக் அட்வெஞ்சர்ஸ்” என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார். அதுமட்டுமல்லாமல் பல ஆக் ஷன் படங்களிலும் லாரா நடித்துள்ளார்.