டெக்சாசில் இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்த இந்திய வம்சாவளி பெண் ஆராய்ச்சியாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளானோ நகரில் வசிப்பவர் ஷர்மிஸ்தா சென்னுக்கு வயது 43. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உயிரியல் தொடர்பான படிப்பில் இவர் ஆராய்ச்சி செய்து வருகிறார். இதுவரை ஏராளமான கட்டுரைகளையும், ஆய்வறிக்கையும் இவர் எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி ஆய்வு தொடர்பாக டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்  புற்றுநோயாளிகளுடனும் இணைந்து பணியாற்றி வருகிறார்.

Murder

இந்நிலையில் கடந்த ஒன்றாம் தேதி வீட்டருகே உள்ள பூங்காவிற்கு ஜாக்கிங் சென்ற இவர், கடுமையாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவரது சடலத்தை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கண்டெடுத்தனர். அதேநேரத்தில், அவரது வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை செய்தனர். அதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி 29 வயது மதிக்கத்தக்க பகரி அபியோனா மொன்கிரீப் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தடகள வீராங்கனையான, ஷர்மிஸ்தா சென்,இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பூங்கா பகுதியில் தினமும் ஜாக்கங் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். அதனை நன்கு அறிந்தவர் ஷர்மிஸ்தாவை பின் தொடர்ந்து கொலை செய்துள்ளார். இச்சம்பவம் டெக்சாஸ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.