30 ஆண்டுகளுக்கு பின் நகத்தை வெட்டிய இளம்பெண்!

World's Longest Fingernails

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வளர்த்துவந்த நகத்தை ஒரு பெண் வெட்டி எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

டெக்டாஸ் மாகாணத்தில் வசித்துவருபவர் அயன்னா வில்லியம்ஸ். இவர் கின்னஸ் உலக சாதனைக்காக கடந்த 30 ஆண்டுகளாக ஆசை ஆசையாய் நகத்தை வளர்த்துள்ளார். தற்போது டாக்டர் ஆலிசன் என்ற சரும பராமரிப்பு மருத்துவரிடம் சென்று தனது நகத்தை வெட்டி எடுத்துள்ளார்.

உலகின் மிக நீளமான விரல் நகங்களை கொண்ட பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான அயன்னாவின் விரல் வெட்டுவதற்கு முன் எப்படி இருந்தது, வெட்டியதற்கு பின் எப்படி இருந்தது ஆகிய படங்கள் கின்னஸ் உலக சாதனை பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

அயன்னாவின் விரலிலிருந்து வெட்டப்பட்ட நகத்தின் நீளம் கிட்டததட்ட 733 செ.மீட்டருக்கு இருந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு கின்னஸ் உலக சாதனை படைக்கும்போது அயன்னாவின் நகங்கள் 19 அடியில் இருந்தன. தற்போது அவை 24 அடியாக வளர்ந்துவிட்டன.

30 ஆண்டுகளில் முதல்முறையாக தனது நகங்களை வெட்டியது அவளுக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணமாக இருந்ததாக அயன்னா தெரிவித்தார்.

1990 களின் முற்பகுதியில் இருந்து தனது விரல் நகங்களை வளர்த்து வருவதாகவும், என் நகங்கள் என்னை உருவாக்கவில்லை, நான்தான் என் நகங்களை உருவாக்கினேன் என்றும் அயன்னா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

டாக்டர் அலிசன் அயன்னாவின்நீண்ட நகங்களை எவ்வாறு வெட்டினார் என்பதைக் காட்டும் சுமார் 8 நிமிட நீள வீடியோவையும் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப்பில் கின்னஸ் உலக சாதனை அமைப்பு பகிர்ந்துள்ளது.