ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும் இந்தியரே?

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவராக இருக்கலாம் எனக் கூறும் சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டது முதலே, அவருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான குறிப்பாக சென்னை உடனான உறவு குறித்த தகவல்கள் இணையதளங்களில் பெருமளவில் பகிரப்படுகின்றன.

கமலா ஹாரிஸ் மட்டுமல்ல அதிபர் வேட்பாளர் ஜோ பிடனே இந்தியாவை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஜோ பிடனின் மூதாதையரான ஜார்ஜ் பைடன், கிழக்கிந்திய கம்பெனியில் கேப்டனாக பணியாற்றி, பணி ஓய்வுக்கு பிறகு இந்தியாவில் தங்கி, இந்திய பெண்ணை மணந்தார் எனவும் பேசப்படுகின்றது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஜோ பிடன் 1972இல் செனட் உறுப்பினராக தேர்வான போது மும்பையில் இருந்து பிடன் என்ற பெயரில் அவரது உறவினர் எனக் கூறி வாழ்த்து கடிதம் வந்ததையும், தன்னுடைய இந்திய தொடர்பு குறித்தும் ஜோ பிடன் இந்திய அமெரிக்கர்கள் மத்தியில் உரையாற்றும் போதெல்லாம் நினைவு கூர்ந்துள்ளார்.

Tim Willasey-Wilsey என்ற லண்டனை சேர்ந்த பேராசிரியர், தான் எழுதிய ஜோ பிடனின் இந்திய தொடர்பு என்ற கட்டுரையில், 1800களில் கிறிஸ்டோபர் பிடன் என்ற கேப்டன் பற்றியும் அவரது சென்னை வாழ்க்கையை பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார். ராயபுரம் பகுதியில் அவர் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது. ஒருவேளை ஜோ பிடனின் மூதாதையர்கள் இந்தியாவில் வாழ்ந்தது உறுதி செய்யப்பட்டால் அவர் கிறிஸ்டோபர் பிடனின் வழித் தோன்றலாகவே இருக்கும் என நம்பப்படுகிறது. இவை தகவல்களாக மட்டுமே இருந்தாலும் கூட ஜோ பிடனும் இந்தியாவுக்கு உறவுக்காரராகிவிட்டார்.

இதையும் படிக்கலாமே: பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கை குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டறிக்கை!

FB Page
– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa