கொரோனா எதிரொலி: அமெரிக்காவில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி

Baby

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கபட்ட வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

White Tongue on Baby: Thrush and Other Causes, Plus Treatment

அதிகரித்துவரும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. கடந்த ஒருவாரமாக அங்கு தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

இந்நிலையில் கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தால், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர். இருப்பினும் அமெரிக்காவில், குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.

வீழ்ச்சிதான் அடைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது.

2019ம் ஆண்டின் பிறப்பு விகிதம் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாக இருந்ததாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. அதனையடுத்து 2020ல் இது மேலும் பிறப்பு விகிதம் சரிந்தது.

2021ஆம் ஆண்டும் 3 லட்சம் குழந்தைகள் குறைவாகப் பிறக்கும் என்று புரூகிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலையிழப்பு, கொரோனா மன உழைச்சல், கொரோனா விதிமுறைகளே இத்தகைய பிறப்பு விகித வீழ்ச்சிக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இதேபோல் வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதமும் தற்போது 57 சதவீதமாக குறைந்துள்ளது.