அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 4 மடங்கு அதிகரிக்கும்…

coronavirus

அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்பால் 4 லட்சம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்பிருப்பதாக வாஷிங்டன் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,92,146 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரேநாளில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு இதுவரை 6 லட்சத்து 39 ஆயிரத்து 176 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா தொற்றால் 1 லட்சத்திற்க்கும் மேற்பட்டேர் உயிரிழந்துள்ள நிலையில் பின்வரும் நாட்களில் அதன் எண்ணிக்கை 4 மடங்கு அதிரிக்க வாய்ப்புள்ளதாக வாஷிங்டன் சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

அதாவது அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் உயிரிழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றால் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிபர் தேர்தல் பரப்புரையால் அங்கு தடுப்பு பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றும் அமெரிக்க அரசு கொரோனாவை கையாள்வதில் தவறான பாதையை நோக்கி செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசிக்கான பரிசோதனையிலும் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டுவருவது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே: உலக சுகாதார நிறுவனத்தை ஏமாற்றும் அமெரிக்கா!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa