அமெரிக்காவில் கொரோனா இரண்டாம் அலை பரவல்! மீண்டும் ஊரடங்கா?

coronavirus

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன.

கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 82லட்சத்து 21ஆயிரத்தும் மேற்பட்டோற் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 2 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறிவருகிறது.

corona vaccine

அமெரிக்காவில் நாள்தொறும் சுமார் 70 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறக்கின்றனர்.

பொருளாதாரத்தை மீட்பதற்காக விரைவாக கட்டுப்பாடுகளை தளர்த்தியதே இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

அமெரிக்காவில் தற்போது கொரோனா நோய் தாக்கம் கடந்த வாரத்தை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்தறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை பரவத்தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த சூழலில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த திட்டமில்லை என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசாங்கம் நோய் தடுப்பு பணிகளை நன்றாகவே மேற்கொண்டு வருவதால், மீண்டும் ஒரு ஊரடங்கு தேவையில்லை என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

150 க்கும் மேற்பட்ட அமெரிக்க மருத்துவ வல்லுநர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் ஊரடங்கை அமல்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையேல் நவம்பர் 1 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில்2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழப்பர் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே:  அமெரிக்காவில் பிறந்த குழந்தையை ஜன்னல் வழியாக தூக்கி வீசிய இந்திய வம்சாவளி பெண்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter