தாயும் தந்தையும் வேண்டுமென சிறுவன் வெளியிட்ட உருக்கமான வீடியோ!

9-year-old boy

ஆதரவற்றோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் ஆறு வயது சிறுவன், தனக்கு ஒரு தாயும் தந்தையும் வேண்டுமென இதயத்தை பிழியும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டதை அடுத்து, அவனை தத்தெடுக்க ஆயிரக்கணக்கானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 2014ஆம் ஆண்டு முதல் அமெரிக்க மனித சேவைகள் துறையின் பராமரிப்பில் இருந்துவரும் ஜோர்டான் என்ற சிறுவன், குடும்பப் பாசத்திற்காக ஏங்கித் தவிக்கின்றான். மூன்று விருப்பங்கள் வழங்கப்பட்டால் என்ன செய்வாய் எனக் கேட்டதற்கு, குடும்பம் – குடும்பம் – குடும்பம், அதுதான் எனது விருப்பம் என ஜோர்டான் கூறியுள்ளான். தனது இளைய சகோதரன் கடந்த ஆண்டு தத்தெடுக்கப்பட்டதைப் போன்றே தனக்கும் ஒரு தாய் – தந்தையோ அல்லது தாய் மட்டுமோ அல்லது தந்தை மட்டுமோ கிடைத்தால் போதும் என்று ஜோர்டான் அந்த வீடியோவில் மன்றாடுவது அனைவரின் நெஞ்சங்களையும் உருகச் செய்துவிட்டது.

9 years old boy jordan

தான் பேச யாராவது சிலர் வேண்டும் என்பதன் காரணமாகவே இந்த வேண்டுகோளை விடுப்பதாக ஜோர்டான் கூறியுள்ளான். ஆகவே தன்னைப் பாதுகாக்க ஒரு தாயும் தந்தையும் வேண்டும் என உருக்கமாகப் பேசி சிறுவன் ஜோர்டான் உருக்கமான வீடியோ வெளியிட்டதை அடுத்து, அவனைத் தத்தெடுக்க 12 மணி நேரத்தில், 5 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன. தற்போது ஜோர்டானுக்கு ஒரு பெற்றோர் கிடைப்பதை உறுதியாகிவிட்டது என்றபோதிலும், ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்துள்ளதால், யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் அவனைப் பராமரித்து வரும் மனித சேவைகள் துறைக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

இதையும் படிக்கலாமேஅமெரிக்காவில் பள்ளி மாணவர்களுக்கான மடிக்கணினிகளுக்கு தட்டுப்பாடு!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook- https://www.facebook.com/tamilmicsetusa
FB Group- https://www.facebook.com/groups/usatamilnews/
Twitter – https://twitter.com/tamilmicsetusa