அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு; 3பேர் பலி

shooting

அமெரிக்காவில் மீண்டும் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு தாக்குதலில், மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து துப்பாக்கி சட்டங்கள் கடுமையாக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துவரும் சூழலில், அண்மைக்காலமாக அமெரிக்காவில் இனவெறி கொலைத் தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டிருக்கிறது.

Three dead, four injured in shooting at North Carolina house party

மார்ச் மாதம் 16ஆம் தேதி அட்லாண்டாவில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஆசிய வம்சாவளியினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் நடந்த அடுத்த ஒருவாரத்தில் கொலொராவிலுள்ள பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு நடந்தது.

இதேபோல் கடந்த வாரம் விர்ஜினியா கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த 2 தினக்களுக்கு முன் ஆரஞ்ச் நகரத்தில் உள்ள அலுவலக கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் வடக்கு கரோலினாவில் உள்ள வில்மிங்டனில் இன்று நடைபெற்ற விருந்தில் திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தாக்குதலில் குறைந்தது மூன்று பேராவது உயிரிழந்திருப்பதாக அம்மாநில காவல்துறை அதிகாரி டானி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது பற்றி இதுவரை தகவல் வெளியாகவில்லை, ஆனால் தாக்குதல் நடத்திய நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

இத்தாக்குதலிற்கான நோக்கம் குறித்தும், பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இதுவரை எந்த விவரங்களும் வெளியாகவில்லை.