நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்ட ட்ரம்ப் ஆதரவாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Christopher Stanton

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையில் தொடர்புடைய டிரம்ப் ஆதரவாளர் ஒருவர் துப்பாக்கியால் மார்பில் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

துணை அதிபராக கமலாஹாரிஸ் தேர்வானார். இவர்கள் இருவரும் வரும் 20 ஆம் தேதி முறைப்படி பதவியேற்கவிருக்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.

இதனிடையே பைடனின் வெற்றியை உறுதி செய்யும்பொருட்டு கடந்த 9 ஆம் தேதி தேர்தல் சபை தேர்வாளர்கள் அளித்த வாக்குகள் நாடாளுமன்றத்தில் எண்ணப்பட்டு, பைடனின் வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கு நிகழ்வு நடந்தது.

அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர்.

இதனால், ஏற்பட்ட கலவரத்தில் ஒரு பெண், ஒரு போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 6பேர் உயிரிழந்தனர்.

உலகையே அதிரவைத்த இந்த நாடாளுமன்ற வன்முறைக்கு ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகளே காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் ட்ரம்ப் ஆதரவாளரான 53 வயதான கிறிஸ்டோபர் ஸ்டாண்டன் ஜார்ஜியா என்பவர் கலந்து கொண்டார். அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த சூழலில் அவர் வீட்டில் துப்பாக்கியால் மார்பில் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் சடலமாக கிடப்பதை அறிந்த அவரது மனைவி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்.

இதனையடுத்து கிறிஸ்டோபர் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து காவல் அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட கிறிஸ்டோபர் ஸ்டாண்டனின் குடியிருப்பில் இருந்து இரண்டு துப்பாக்கிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கிறிஸ்டோபர் ஸ்டாண்டன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 1000 டொலர் அபராதம் அல்லது 180 நாட்கள் சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதையும் படிக்கலாமே: ட்ரம்ப்பை கடவுளாக நம்பும் க்யூஅனான் மக்கள்! யார் இவர்கள்?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter