ட்ரம்ப்பால் பைடனுக்கு சிக்கல்!

தேர்தல் முடிவுகளை ஏற்க ட்ரம்ப் மறுத்துவருவதால் அதிகார மாற்றத்துக்கான பணிகளை தொடங்குவதில் பைடனுக்கு சிக்கல் நீடிக்கிறது.

பொதுவாக அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான உடன், வெற்றியாளர் தரப்பில் ஆட்சி மாற்றத்துக்கான குழு அமைக்கப்படும்.

அந்த குழு சுமூகமான முறையில் அதிகாரங்களை மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ளும்.

ஆனால் இந்த முறை தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது, தோல்வியை ஏற்க ட்ரம்ப் தரப்பு மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் ஆட்சிமாற்றத்துக்கான பணிகள் முழுமையாக தொடங்காமல் உள்ளன.

GENERAL SERVICES ADMINISTRATION – அமெரிக்காவில் ஆட்சி மாற்றத்தை முன் நின்று கவனிக்கும் அமைப்பு இது. தேர்தல் வெற்றியாளர் அறிவிக்கப்பட்ட உடன், இந்த அமைப்பு வெற்றியாளருக்கான சான்றிதழை அளிக்கும் . இதனை அடுத்து ஆட்சி மாற்றத்துக்கான பணிகளை தொடங்க நிதி ஒதுக்கப்படும்.

வெள்ளை மாளிகையில் இவர்களுக்காக அலுவலக அறை வழங்கப்படும். ஆனால் GENERAL SERVICES ADMINISTRATION ஜோபைடனை இதுவரை வெற்றியாளராக அறிவிக்கவில்லை. ஏனெனில் இதன் தலைவர் ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்டவர்.

வெள்ளை மாளிகை சிக்னலுக்காக இவர் காத்து கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனால் ஆட்சி மாற்றத்துக்கான பணிகள் தொடங்காமல் உள்ளன. இந்த சிக்கல்களால் ஜோ பைடன் அமைத்த ஆட்சி மாற்ற குழு சோர்ந்து போகவில்லை.

trump vs joe biden

ஆட்சிமாற்ற நடவடிக்கைகளுக்காக BUILDBACKBETTER.COM என்ற இணையதளத்தை தொடங்கியுள்ளனர் பைடன் குழுவினர். தாங்கள் முன்னெடுக்கும் பணிகளை சமூகவலைத்தளங்களில் அப்டேட் செய்து வருகின்றனர்.

பைடனும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழுவை நியமித்துள்ளார். அடுத்ததாக பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்கான திட்டமிடுதலையும் தொடங்கியுள்ளனர். ஆனால் வெள்ளை மாளிகை ஒத்துழைப்பும் இவர்களுக்கு அவசியம். ட்ரம்பின் பிடிவாதத்தால் ஆட்சி மாற்றம் சுமூகமாக நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்க அதிபரின் மருத்துவக்குழுவில் ஈரோடு பெண்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

Related posts