பள்ளிகளை திறக்க வேண்டும் – அமெரிக்க கல்வித்துறை அமைச்சர் அதிரடி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், பள்ளிகளை திறக்க வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தாக்கம் பெரிதும் அதிகரித்துவரும் நிலையில், பள்ளிகளை திறக்க மாநில ஆளுநர்களுக்கு அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவித்தன. அரசியல் காரணங்களுக்காக சிலர் பள்ளிகளை மூடியிருக்க வேண்டும் என்று விரும்புவதாக தெரித்த ட்ரம்ப். அனைத்து பள்ளிகளையும் திறக்குமாறு ஆளுநர்களுக்கு அழுத்தம் தரப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

school

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கல்வி அமைச்சர் பெட்ஸி தேவோஸ், பள்ளிகளுக்கு செல்வதால் குழந்தைகளுக்கு ஆபத்து என எந்த ஒரு தரவும் கூறவில்லை எனவே பள்ளிகள் திறப்பை ஊக்குவிக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படுமா? மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது குறித்து அவர் கூறவில்லை. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில் கல்வித்துறை அமைச்சர் பள்ளிகளை திறக்க வேண்டும் என கூறி இருப்பது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.