கொரோனா பாதிப்புக்கு சீனா பொறுப்பேற்க ஐநா வலியுறுத்த வேண்டும்: அதிபர் ட்ரம்ப்!

trump

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு நாள் இன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

இதுவரை 68 லட்சத்து 80ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்குள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 8 மாதங்களாகியும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்தபடியே இருக்கிறது. அது இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் ஒரு ஆண்டு ஆகலாம் என மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Corona Patients

ஐநா பொதுச் சபையின் 75 ஆவது கூட்டத்தில் காணொலி மூலம் பேசிய அதிபர் ட்ரம்ப், “கொரோனா தொற்றால் 188 நாடுகள் எண்ணில் அடங்கா உயிர் சேதங்களை சந்தித்துள்ளன. சீன அரசும் உலக சுகாதார அமைப்பும் கொரோனா வைரஸ் பரவல் குறித்து தவறான தகவல்களை அளித்தது.

கொரோனா பரவிய ஆரம்ப காலகட்டத்தில் சீனாவின் உள்நாட்டில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஆனால் வெளிநாடுகளுக்கு விமான சேவையை அனுமதித்தது. இதுவே நோய் பரவ காரணம். எனவே உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதற்கு முழு காரணம் சீனாவே. இதனை அந்நாடு ஏற்றுக்கொள்ள ஐநா வலியுறுத்த வேண்டும்” எனக் கூறினார்.

இதையும் படிக்கலாமே: விமானம் தரையிறங்கும்போது திடீர் விபத்து; 4 பேர் உயிரிழப்பு!

– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa