தபால் வாக்கு பேரழிவை ஏற்படுத்தும்: ட்ரம்ப் எச்சரிக்கை

Trump

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார்.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், ட்ரம்பும், ஜோ பிடனும் போட்டிப்போட்டு கொண்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் செல்வாக்கு செலுத்த விரும்புவதாக அமெரிக்க உயர் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இருப்பினும் இரு தலைவர்களும் பரஸ்பரம் விமர்சிப்பதும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதுமாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் தபால் முறையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் தபால் முறை வாக்குப்பதிவுகளில் ஏமாற்று வேலைகள் நடப்பதாகவும், இதுபோன்ற வாக்குப்பதிவு மோசடிகளை ஏற்படுத்தும் அதிபர் ட்ரம்ப் குற்றஞ்சாட்டிவருகிறார்.

trump

இந்நிலையில், பென்சில்வேனியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம்ப், “சீன வைரஸ் தாக்குவதற்கு முன் எனது தலைமையிலான அரசு அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கியிருந்தது.

ஆனால் இந்த கொரோனா எல்லாத்தையும் அழித்துவிட்டது. அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவை உலகின் உற்பத்தி வல்லரசாக மாற்றுவேன்.

தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை ஒரு பேரழிவை ஏற்படுத்தும். தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தபால் வாக்குப்பதிவை தடை செய்யகோரி உச்சநீதிமன்றம் வரை செல்லேன்” எனக் கூறினார்.

இதையும் படிக்கலாமே:  அமெரிக்காவிலும் இனி கையேந்தி பவன்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter