வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில் முறைகேடு செய்த அதிபர் ட்ரம்ப்?!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கல்லூரி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வை வேறு ஒருவருக்கு பணம் கொடுத்து எழுத வைத்ததாக அவரது மருமகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மருமகளான மேரி ட்ரம்ப் எழுதிய ‘டெல் ஆல்’ புத்தகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நியூயார்க் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து 20 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தை சைமன் & ஷுஸ்டர் புத்தக வெளியீட்டு நிறுவனம் அடுத்தவாரம் வெளியிடவுள்ளது. அதில் உலகின் மிக ஆபத்தான மனிதனை தனது குடும்பம் எவ்வாறு உருவாக்கியது என்பது உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக மேரி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் பென்சில்வேனியாவில் உள்ள வார்டன் (Wharton )ஸ்கூல் ஆப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் அதிபர் ட்ரம்ப் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட பாணியில் முறைகேடு செய்தது குறித்தும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த பல்கலைக்கழகத்தின் sat என்ற நுழைவுத்தேர்வில் வெற்றிப்பெற அதிபர் ட்ரம்ப் லஞ்சம் கொடுத்துள்ளார் என மேரி ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

trump

விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் கதாநாயகன் கமல்ஹாசன், மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்குவதற்காக வேறு ஒருவரை நுழைவுத்தேர்வு எழுத வைப்பார். அதன்மூலம் நூதன மோசடி செய்து பின் மருத்துவக் கல்லூரியில் படிப்பார். அப்படி ஒரு மோசடியிலேயே அதிபர் ட்ரம்பும் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.