இணையதளம் மீதான சைபர் தாக்குதல் உண்மை தான்- ட்ரம்ப்… ஒரு அதிபர் பாக்குற வேலையா இது?

Trump

2018 ஆம் ஆண்டு ரஷ்யாவின் இணைய ஆராய்ச்சி நிறுவனத்தின் மீது அமெரிக்கா நிகழ்த்திய சைபர் தாக்குதல் உண்மை என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது ட்ரம்ப் இதனை வெளிப்படையாகக் கூறினார். 2016 அதிபர் தேர்தல் மற்றும் 2018 ஆம் ஆண்டு இடைக்கால தேர்தல்களின் போது அந்த ரஷ்ய இணையதளத்தின் தேவையற்ற தலையீடு இருந்ததால் அந்த சைபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். ரஷ்யாவை எதிர்கொள்ளும் கொள்கை ரீதியிலான தாக்குதலாகவே அது நிகழ்த்தப்பட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதிகாரப்பூர்வமாக இந்த தாக்குதல் உண்மை தான் என வெளி உலகிற்கு கூறுவது இதுவே முதல் முறையாகும்.