பதவியை இழக்கப்போகும் ட்ரம்ப், பாதுகாப்பு அமைச்சரை நீக்கியதால் சர்ச்சை

Trump -Mark Esper

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரை அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடியாக நீக்கியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. கடந்த 5 தினங்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது.

வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பம் முதல் ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் முன்னிலையில் இருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற மொத்தம் 270 வாக்குகள் தேவை. பென்சில்வேனியாவில் வெற்றிபெற்றதன் ஜோபைடன் வெற்றிப்பெற்றதால் 284 வாக்குகள் பெற்று பைடன் அதிபரானார்.

இந்நிலையில் மார்க் எஸ்பர் உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாகவும் அவருக்கு பதில் தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் மில்லர் அமைச்சராக நியமிக்கப்படுவதாகவும் ட்ரம்ப் தன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Mark Esper

அண்மைக்காலமாக அமெரிக்காவில் நடந்து வந்த இன ரீதியான மோதல்கள் விவகாரத்தை கட்டுப்படுத்த எஸ்பர் போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்ற அதிருப்தியில் ட்ரம்ப் இருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் இம்முடிவுக்கு வந்திருக்கலாம் என்றும் தெரிகிறது.

அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெறாத நிலையில் வரும் ஜனவரி 19ஆம் தேதி வரை மட்டுமே அப்பதவியில் அவர் நீடிக்க முடியும்.

இந்நிலையில் குறுகிய பதவிக் காலமே உள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சரை ட்ரம்ப் நீக்கியது கவனத்தை ஈர்த்துள்ளது.

அண்மையில் இந்தியா வந்த அமைச்சர் மார்க் எஸ்பர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது

அமெரிக்காவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கறுப்பின மக்கள் போராட்டங்களை ஒடுக்க பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த மறுப்பு தெரிவித்ததில் இருந்தே எஸ்பருக்கும் ட்ரம்புக்கும் இடையே விரிசல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:  கமலா ஹாரிஸ் அடுத்த 4 ஆண்டுகள் இங்கேதான் தங்கப்போகிறார்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter