“அதிபர் மாளிகையை ஒரு ரியாலிட்டி ஷோ போல் நடத்துவதா?” – ஒபாமா

barak Obama

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப்பை, ஜனநாயக மாநாட்டில் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, கடுமையாக விமர்சனம் செய்யவிருக்கிறார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தெதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், தீவிர தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்துவருகிறார். ஆனால் கொரோனா பரவலை தடுக்க தேர்தல் பிரச்சாரங்களில் ஜோ பிடன் பங்கேற்கவில்லை. மாறாக இணையவழி பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ள ஜோ பிடன் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு கொரோனா விவகாரத்தை திறம்பட கையாளவில்லை, கறுப்பின மக்களுக்கு ட்ரம்ப் ஆட்சியில் பாதுகாப்பில்லை எனக் கூறி வாக்குகளை சேகரித்துவருகிறார்.

இந்நிலையில் அதிபர் தேர்தலையொட்டி ஃபிலடெல்ஃபியாவில் நடைபெறவிருக்கும் மாநாட்டில், முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவின் உரை குறித்து முன் வெளியிடப்பட்ட பகுதிகளின்படி, அவர் என்னவெல்லாம் பேசவிருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது. வெள்ளை மாளிகையை மற்றொரு “ரியாலிட்டி ஷோ” அதாவது, மெய்மை காட்சி போன்று ட்ரம்ப் நடத்தி வருவதாக குற்றஞ்சாட்ட ஒபாமா திட்டமிட்டுள்ளார். குடியரசுக் கட்சியின் வாரிசான டொனால்டு ட்ரம்ப், “அதிபர் பணியை நிறைவேற்றும் அளவுக்கு வளரவில்லை, ஏனெனில் அவரால் அது முடியாது” எனவும் தனது உரையில் ஒபாமா குறிப்பிட உள்ளார்.

அதிபர் பதவியின் அற்புதமான சக்தியை தனக்கும் தனது நண்பர்களையும் தவிர வேறு யாருக்கும் உதவ ட்ரம்ப் பயன்படுத்தியதில்லை என ஒபாமா விமர்சிக்க உள்ளார்.
அதிபர் பதவியை இன்னும் ஒரு ரியாலிட்டி ஷோ போன்று பயன்படுத்துவதைத் தவிர டொனால்டு ட்ரம்ப்புக்கு ஆர்வம் இல்லை எனவும் குறைகூற ஒபாமா விமர்சிப்பார்.