அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் அனுமதி!

trump

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சிகிச்சைக்காக வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். வயதானவர் என்பதால் ஹை ரிஸ்க் பட்டியலில் ட்ரம்ப் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ஒருநாள் மட்டுமே வீட்டில் தனிமையில் இருந்த ட்ரம்ப், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மேரிலாண்டில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு லேசாக காய்ச்சல் இருப்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், மற்றபடி அவர் நலமுடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில தினங்களுக்கு அதிபர் ட்ரம்ப் மருத்துவமனையில் இருந்தே பணிகளை மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு புறப்படும் முன், முகக்கவசம் அணிந்து சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், செய்தியாளர்களை பார்த்து நலமுடன் திரும்புவேன் என சைகை மட்டும் காட்டிவிட்டு சென்றுவிட்டார். அவருக்காக பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட ஹெலிகாப்டரில் பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். முன்னதாக ட்விட்டரில் தனது உடல் நலம் சீராக வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறி வீடியோ வெளியிட்ட ட்ரம்ப், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தானும், தனது மனைவியும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்தார்.

தனது தந்தை போராட்டக் குணம் கொண்டவர் என்றும், கொரோனாவை வென்று நிச்சயம் நலமுடன் திரும்புவார் என்றும் ட்ரம்ப்பின், மகள் இவாங்கா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மாறாக ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு நேற்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளது. ஜோ பிடனும் அதிபர் ட்ரம்பும் அண்மையில் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து கொண்டதால் அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

இதையும் படிக்கலாமே:  ட்ரம்புக்கு கொரோனா! தலைகீழாக மாறும் அமெரிக்க அரசு!!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter