அமெரிக்காவில் முகக்கவசம் அணிவது கட்டாயம்… சட்டமாக்கப்படுமா? -அதிபர் ட்ரம்ப் விளக்கம்

கடந்த மாதம் அமெரிக்க வெள்ளை மாளிகையில் பணியாற்றிவரும் சுமார் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து வெள்ளை மாளிகைக்குள் கொரோனா தொற்று பரவுவது கவலையளிப்பதாகவும், தொற்று பரவலை தடுக்க தகுந்த நடவடிக்கைகளை செய்துவருவதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அமெரிக்க மக்கள் கொரோனா பரவலை தடுக்க கட்டாயம் முகக்கவசம அணிய வேண்டும் என அறிவுரை கூறிய அதிபர் ட்ரம்ப், முகக்கவசம் அணிந்தால் பாதுகாப்பாகத்தான் இருக்கும். ஆனால், மற்ற தலைவர்களைச் சந்திக்கும் போதும், பேசும் முகக்கவசம் இருந்தால் அது சரியானதாக இருக்காது என்பதால், அதை அணியவில்லை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளிலும், பொது இடங்களிலும் தேர்தல் பரப்புரைகளின்போதும் அதிபர் ட்ரம்ப் முகக்கவசம் அணியவில்லை. இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்நிலையில் முகக்கவசம் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்திருக்கும் அதிபர் ட்ரம்ப், “கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவதற்கு தனது முழு ஆதரவு உண்டு. நெருக்கமாக நிற்கும் சந்தர்ப்பங்களில் தாம் முகக்கவசம்  அணிவதை தானும் விரும்புகிறேன். இருப்பினும் அமெரிக்காவில் நாடு முழுவதும் முகக்கவசம் அணிவதை கட்டாயப்படுத்தி சட்டம் பிறப்பிக்க வேண்டிய அவசியம் எழவில்லை” என தெரிவித்தார்.