எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கடவுள் கொடுத்த வரம்: அதிபர் ட்ரம்ப்

கொரோனா தொற்று ஏற்பட்டதை கடவுள் அளித்த வரமாக கருதுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 1-ந்தேதி டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் ட்ரம்புக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் மேரிலாண்ட்டில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் தரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வெள்ளை மாளிகை திரும்பினார் அதிபர் ட்ரம்ப்

Donald Trump

இந்நிலையில் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், “தனக்கு ஏற்பட்ட பாதிப்பு கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதன் அவசியத்தை கற்றுக்கொடுத்திருக்கிறது. கொரோனா வைரஸை ஏற்படுத்தி பேரழிவை ஏற்படுத்தியதற்காக சீனா அதிக விலை கொடுக்க வேண்டும். மருத்துவமனையில் இருந்தபோது மோசமாக உணர்ந்தேன். தற்போது தன்னுடைய உடல்நலம் சீராக இருக்கிறது. எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கடவுள் அளித்த வரம். எனக்குக் கிடைத்த சிகிச்சை உங்களுக்கும் கிடைக்க வழிவகை செய்வேன். சிகிச்சை அனைவருக்கும் இலவசம் என்று அறிவிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று திரும்பினாலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எப்போது வெளியே செல்லலாம் என்பது நிச்சயமற்ற நிலை உள்ளது. அதனால், அவர் எப்போது பிரசாரத்தில் ஈடுபடுவார், இரண்டாவது விவாதத்தில் ஈடுபடுவார என்ற குழப்பத்தில், அவருடைய பிரசாரக் குழு உள்ளது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்கா வரலாற்றிலேயே ட்ரம்ப் நிர்வாகம்தான் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது: கமலா ஹாரிஸ்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

 

Related posts