கமலா ஹாரிஸ் அதிபர் ஆவார்- ட்ரம்ப் கணிப்பு!

trump- biden

அமெரிக்க கடந்த சில நாட்களுக்கு முன் அதிபர் ஜோ பைடன் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறியபோது அதன் படிக்கட்டுகளில் தடுக்கி விழுந்தார்.

விமானம் மூலம் மேரிலாந்திலிருந்து அட்லாண்டா நகருக்கு செல்ல திட்டமிட்ட பைடன், விமானத்தின் படிக்கட்டுகளில் மேல் தளத்திற்கு சென்றார்.

அவர் படிக்கட்டுகளில் பாதிதூரம் ஏறிவிட்டநிலையில் தடுக்கி விழுந்து உடனடியாக எழுந்துவிட்டார். இதேபோன்று மூன்று முறை பைடன் தடுமாறி விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

biden
சர்வதேச ஊடகங்கள் இதனை கண்டுகொண்டாலும் அமெரிக்க ஊடகங்கள் இதனை கண்டுக்கொள்ளவே இல்லை.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் பைடன் தடுக்கி விழுந்ததை கண்டுகொள்ளாத அமெரிக்க ஊடகங்களை விளாசியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், விரைவில் கமலா ஹாரிஸ் அதிபராக பொறுப்பேற்றுக்கொள்வார் என கணித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், “அதிபர் பைடன் விழுவதை பார்க்க பயங்கரமாக இருந்தது. ஒரு முறை அல்ல 3 முறை தடுமாறி விழுகிறார்.

ஆனால் அமெரிக்க ஊடகங்கள் இதனை கண்டுகொள்ளவில்லை. பைடன் விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பைடனின் மூளை செயல்பாடுகள் குறைந்துகொண்டே வருகின்றன என்பதற்கு இதுவே உதாரணம்.

பைடன் கையெழுத்திடும் முக்கிய ஆவணங்களில் உண்மையான காரணங்களை அறிந்துதான் அவர் கையெழுத்திடுகிறாரா என்பது சந்தேகம்தான்.

பைடனின் செயல்பாடுகள் இப்படி தடுமாற்றமாக இருந்தால், 25 வது சட்டத்திருத்தத்தை பயன்படுத்து கமலா ஹாரிஸை அதிபராக அவரது கட்சியினர் முயற்சிக்கலாம்” என தெரிவித்துள்ளார்.