பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா ட்ரம்ப்?

trump

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக கட்சி தீவிரமாக முன்னெடுத்துள்ளது.

புதன்கிழமை அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நுழைந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றம் மீதான இந்த தாக்குதலில் ட்ரம்ப் பங்கு வகித்ததாக கூறும் ஜனநாயக கட்சியினர் அவர் உடனே அதிபர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். பிரதிநிதிகள் அவையின் சபாநாயகரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவருமான நான்சி பெலோசி, பிரதிநிதிகள் அவையில் ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் முன்னெடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

violence

அரசு மீதானவன்முறையை தூண்டும் வகையில் ட்ரம்ப் செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து பதவி நீக்க தீர்மானத்துக்கான வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

பதவி நீக்க தீர்மானம் இரண்டு அவையில் நிறைவேறும் பட்சத்தில் அதிபர் பதவியில் இருந்தவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் ட்ரம்புக்கு கிடைக்காது.

ட்ரம்பின் பதவிக்காலம் வரும் 20ஆம் தேதியுடன் முடிவடைவதால் அதற்குள் பதவி நீக்க தீர்மானத்தை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக 25ஆவது சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி ட்ரம்ப் பதவிநீக்கம் செய்யப்படலாம் என சொல்லப்பட்டது.

அதிபர் கடமையை ஆற்றுவதற்கான தகுதியோடு ட்ரம்ப் இல்லை நாடாளுமன்ற தலைவர்களுக்கு அமைச்சரவை உறுப்பினர்களும் துணை அதிபரும் கடிதம் எழுத வேண்டும்.

அப்படி எழுதினால் துணை அதிபர் பென்ஸிடம் அதிபர் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும் 2019ஆம் ஆண்டு இறுதியில் ட்ரம்ப் மீது முன்னெடுக்கப்பட்ட பதவி நீக்க தீர்மானம் தோல்வி அடைந்தது.

 

இதையும் படிக்கலாமே: அமைதி காக்கும்படி ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் வேண்டுகோள்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter