ரூ.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யும் மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்து

trump

அமெரிக்காவில் கொரோனா நிவாரணத்துக்காக 66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யும் மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

கொரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்த அமெரிக்கர்களுக்கு உதவும் திட்டம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் அதை புதுப்பிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் தர வேண்டும்.

ஆனால் இதனை கண்டுகொள்ளாத அதிபர் ட்ரம்ப் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு ஃப்ளோரிடா சென்றார். அங்கு வழக்கம் போல் கோல்ஃப் விளையாட்டில் ஈடுபட்டார் ட்ரம்ப்.

கொரோனா நிவாரணத்துக்காக 66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டால் மட்டுமே சட்டமாகும்.

இந்த நிதியிலிருந்து ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் தலா 45 ஆயிரம் வழங்கப்படும்.

ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு வழங்கும் உதவித் தொகையை 45 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாயாக அதிகரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் தர வேண்டும் எனக் கூறி அத்திட்டத்திற்கு அனுமதி தராமல் ட்ரம்ப் காலம்தாழ்த்தி வந்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பைடன், அதிபர் தனது கடமையை செய்யத் தவறி விட்டார் எனக்கூறினார்.

அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்றாலும் அவருக்கு வரும் ஜனவரி 20ஆம் தேதி வரை பதவிக்காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trump

இதனிடையே இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தற்போது அதிபர் ட்ரம்ப் கொரோனா நிவாரணத்துக்காக 66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யும் மசோதாவில் கையெழுத்திட்டார்.

ஒருவேளை அமெரிக்க அரசின் செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் திட்டத்திற்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் தராமல் இருந்திருந்தால் அரசின் செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும், அதுமட்டுமின்றி அமெரிக்க அரசு ஊழியர்களின் ஊதியமும் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டிருக்கும்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவை அதிரவைத்த துப்பாக்கிச்சூடுகள்; 4 பேர் பலி

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter