பைடனின் வெற்றியை ஏற்க மறுத்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம்!

Protester

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டொனால்டு ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர். இதனால் தலைநகர் வாஷிங்டனில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க நாடாளுமன்றம் கூடியது.

இதற்கான இரு அவையின் கூட்டுக் கூட்டத்தில், தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் தலைமையில், ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

Congress resumes hours after throngs of Trump backers storm, invade Capitol Hill - Pique Newsmagazine

நாடாளுமன்றம், அதிபர் மாளிகையிலிருந்து சுமார் 2 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

அப்போது அங்கு திரண்ட ஆயிரக்கணக்கான ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள், “அமெரிக்கா… அமெரிக்கா” என முழக்கமிட்டபடி, அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டும் உடைத்துக் கொண்டும் நாடாளுமன்றத்துக்குள் புகுந்தனர்.

“என்னை மிதிக்க வேண்டாம்” என்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட கொடிகளையும் கைகளில் ஏந்தியபடி வந்திருந்த அவர்கள், ஜோ பைடனை அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு எதிராக குரல் எழுப்பினர்.

அப்போது அவர்களுக்கும் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்ததால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதனால் ஜோ பைடனை அதிபராக அறிவிக்கும் நிகழ்வு நிறுத்தப்பட்டு, துணை அதிபர் மைக் பென்ஸ் உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதர உறுப்பினர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் நாடாளுமன்ற அவையின் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்பட்டு பூட்டப்பட்டது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் 6 மணிநேரத்திற்கு பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து நாடாளுமன்றம் தொடங்கியது.

இதையும் படிக்கலாமே: அதிபர் பதவியை விடமாட்டேன்- ட்ரம்ப் பிடிவாதம்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter