டிக்டாக்கை மைக்ரோசாப்டுக்கு விற்க 45 நாள் அவகாசம் அளித்த ட்ரம்ப்!

டிக்டாக் செயலின் அமெரிக்க செயல்பாடுகளை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பதற்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 45 நாட்கள் அவகாசம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா- சீனா இடையிலான மோதலை தொடர்ந்து சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. பயனர்களின் தகவல்களை சீனா திருடுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அமெரிக்காவும் டிக்டாக் செயலியை தடை செய்ய ஆலோசனை செய்தது. இதனால் டிக்டாக் நிறுவனத்தின் தலைமையகத்தை சீனாவிலிருந்து வேறு நாடுகளில் அமைக்க அந்நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் டிக்டாக் நிறுவனத்தின் உரிமையை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க பைட் டான்ஸ் நிறுவனம் திட்டமிட்டது. டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனமாக மாற்றினால் இழந்த வருவாயையும், நம்பக தன்மையை டிக்டாக் மீண்டும் பெறமுடியும் எனக் கூறப்படுகிறது.

Tiktok

அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்த நிலையில் டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாடுகளை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் ஆலோசனை நடத்தினார். அப்போது டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்பதற்கு பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு 45 நாள் அவகாசம் அளிப்பதாக ட்ரம்ப் கூறினார். இதைத் தொடர்ந்து டிக்டாக் செயலியை வாங்க சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துடன் ஸ்பேச்சுவார்த்தை நடைபெறுவதை உறுதி செய்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உடன்பாடு எட்டப்படும் என கூறியுள்ளது. இந்த உடன்பாடி ஏற்பட்டால் மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக் செயலியின் செயல்பாடுகளை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் உரிமையாக்கிக்கொள்ளும்.

இதையும் படிக்கலாம்: அமெரிக்கா அதிபர் தேர்தலை தள்ளி போட முடியுமா? சட்டம் சொல்வது என்ன??