அமெரிக்கா லவ்ஸ் இந்தியா..! ட்ரம்ப் ட்வீட்!!

அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜூலை 4ம் தேதி அமெரிக்காவில் சுதந்திர தினம் கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அங்கு சுதந்திர தின கொண்டாட்டங்கள் களைகட்டின. இது அமெரிக்காவின் 244வது சுதந்திர தினம் ஆகும்.

இந்த நிலையில் அமெரிக்காவின் சுதந்திர தினத்துக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, “நான் அதிபர் டிரம்பிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அதேபோல் அமெரிக்க மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அமெரிக்காவின் 244வது சுதந்திரம் தினம் இது. உலகின் பெரிய ஜனநாயக நாடுகள் என்ற ரீதியில், நாம் சுதந்திரம் மற்றும் மனித வளத்தை இன்று கொண்டாட வேண்டும்” என பதிவிட்டிருந்தனர்.

இதற்கு ட்விட்டரிலேயே நன்றி தெரிவித்த அதிபர் ட்ரம்ப், “நன்றி என் நண்பரே.. அமெரிக்கா லவ்ஸ் இந்தியா” எனக் குறிப்பிட்டுள்ளார்.