அமைதி காக்கும்படி ஆதரவாளர்களுக்கு ட்ரம்ப் வேண்டுகோள்

Trump

நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தனது ஆதரவாளர்களை அமைதி காக்கும்படி அதிபர் டொனால்டு ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், இத்தேர்தல் தங்களிடமிருந்து திருடப்பட்ட ஒரு தேர்தல் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு மகத்தான தேர்தல் என்பதை அனைவரும் அறிவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

நமக்கு அமைதி வேண்டும் என்று குறிப்பிட்ட ட்ரம்ப், தாங்கள் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

வன்முறைக்கு மத்தியில், பதவி விலகும் ட்ரம்ப் தெரிவித்திருக்கும் கருத்துகள் சர்ச்சைக்குரியது என்றும், ஆகவே அவரது வீடியோவை கட்டுப்படுத்துவது எனவும் ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

trump

ட்ரம்ப்பின் இந்தப் பதிவு வன்முறைக்கு வித்திடும் எனவும், அதற்கு பதிலளிக்கவோ அல்லது மீள் பதிவிடவோ முடியாது என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நாடாளுமன்ற முற்றுகையின்போது தனது ஆதரவாளர்கள் மத்தியில் ட்ரம்ப் பேசியதின் வீடியோவை ஃபேஸ்புக் நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கிவிட்டது.

இது வன்முறையின் அபாயத்தை குறைப்பதற்குப் பதிலாக தூண்டும் வகையில் இருப்பதாக பேஸ்புக் நிறுவனத்தின் ஒருமைப்பாட்டு துணைத் தலைவர் கை ரோசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதால் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக தொடர்ந்து குற்றஞ்சாட்டிவரும் அதிபர் ட்ரம்ப், அதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவு வன்முறையை தூண்டும்வகையில் இருப்பதாக கூறி அவரின் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்பட்டன. ட்ரம்பின் ட்விட்டர் பக்கம்12 மணி நேரமும், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் 24 மணி நேரமும் முடக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: நாடாளுமன்றத்தில் வன்முறை- 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter