காணொலி விவாதத்தில் பங்கேற்க ட்ரம்ப் மறுப்பு!

Trump- biden

அமெரிக்க அதிபர் பதவிக்கு வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபர் ட்ரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனும் போட்டியிடுகிறார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் பல மாகாணங்களில் அதிபர் ட்ரம்ப், ட்ரம்பும், ஜோ பிடனும் போட்டிப்போட்டு கொண்டு வாக்குகளை சேகரித்துவருகின்றனர். அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளி வாக்காளர்களின் ஓட்டு, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் செல்வாக்கு செலுத்த விரும்புவதாக அமெரிக்க உயர் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

Trump- Biden
Image: TOI

இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான இரண்டாவது விவாதம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தாம் பங்கேற்கப் போவதில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். காணொலி வாயிலாக விவாதம் செய்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஜோ பைடனை பாதுகாக்கவே இந்த ஏற்பாடு என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். வரும் 15ஆம் தேதியன்று இரண்டாவது விவாதம் மியாமியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ட்ரம்ப்-பைடன் இருவரும் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் இருந்து விவாதத்தில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த வாரத்தில் அதிபர் ட்ரம்ப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் விவாதத்தை ஏற்பாடு செய்யும் ஆணையம் அறிவித்திருந்தது.

இதையும் படிக்கலாமே: எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கடவுள் கொடுத்த வரம்: அதிபர் ட்ரம்ப்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

Related posts