கடும் போராட்டத்துக்கு பின் அமெரிக்காவுக்குள் நுழைந்த டிக்டாக்!

Tiktok

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்தின் செயலியான டிக்டாக் உலகம் முழுவதும் பிரபலம். ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேர வீடியோ மூலம், திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்பதால் இளைஞர்கள் மத்தியில் இந்த செயலிக்கு மிகுந்த வரவேற்பு உண்டு.

உலகம் முழுவதும் சுமார் 70 கோடி பயனர்களை கொண்டிருக்கும் டிக்டாக், அமெரிக்காவில் சுமார் 10 கோடி பேரை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கர்களின் தரவுகளை டிக்டாக் திருடுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து டிக்டாக் செயலியின் அமெரிக்கா உரிமையை 90 நாட்களுக்குள் விற்க வேண்டும் என அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸிற்கு அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் உத்தரவிட்டார்.

ஆனால் டிக்டாக் நிறுவனத்தை மைக்ரோ சாப்ட் நிறுவனம் வாங்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்திடம் டிக்டாக்கை விற்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இரு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டதால் அமெரிக்காவில் டிக்டாக் செயல்பட தடையில்லை என ட்ரம்ப் கூறினார்.

இதனிடையே டிக்டாக் அமெரிக்காவில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க 5 பில்லியன் டாலர் கல்வி நிதியை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்திற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்தார்.

இதனால் அமெரிக்க கல்வி நிதிக்காக 5 பில்லியன் டாலர் வழங்க டிக்டாக் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

அந்த தொகையில் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளாராம். ஒருபுறம் பள்ளி, கல்லூரி மாணவர்களை டிக்டாக் செயலி அடிமைப்படுத்திக்கொண்டிருந்தாலும், மறுபுறம் மாணவர்களின் கல்விக்கு நிதிக்கொடுத்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாமே: அதிபர் ட்ரம்புக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பிய பெண்!

FB Page

– https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
– https://twitter.com/tamilmicsetusa