மீண்டும் மாஸ்க் அணிந்து பொதுவெளியில் தோன்றிய ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டாவது முறையாக முக கவசம் அணிந்து பொதுவெளியில் தோன்றியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் உலகமே சிக்கி தவித்துவரும் நிலையில் அதற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சுமார் 120 முன்னணி நிறுவனங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பில் முனைப்புக்காட்டி வருகின்றன. இந்நிலையில் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்கா, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது.

trump

இந்நிலையில் வட கரோலினாவின் மோரிஸ்வில் நகரில் உள்ள புஜிஃபில்ம் (Fujifilm)ஆலைக்கு சென்றபோது அதிபர் ட்ரம்ப், முகக்கவசம் அணிந்திருந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்பு வால்டர் ரீட் (Walter Reed) ராணுவ மருத்துவமனை மையத்தை பார்வையிடச் சென்றபோதும் அவர் முகக்கவசம் அணிந்திருந்தார். இந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என்றும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைத்து மாநில ஆளுநர்களும் பொதுமுடக்க தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்றும் அதிபர் ட்ரம்ப் கூறினார்.

நோவாவாக்ஸ் உருவாக்கியுள்ள COVID-19 தடுப்பூசிக்கு முக்கிய மூலகூறுகள் புஜிஃபில்ம் ஆலையிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதனை ஆய்வு செய்வதற்காக வட கரோலினா ஆய்வகத்திற்கு அதிபர் ட்ரம்ப் சென்றிருந்தார்.

ஆபரேஷன் வார்ப் ஸ்பீட் தடுப்பூசி முயற்சி மூலம் நோவாவாக்ஸ் ஒப்பந்தத்தின் மூலம் ஜனவரி 2021 க்குள் 300 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் உருவாக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: கொரோனா எதிரொலி: அமெரிக்காவில் மீண்டும் ஊரடங்கு?