கொரோனாவால் வேலை இழந்தோருக்கான நிதி ரத்து!

Donald Trump

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் அந்நாட்டு நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றியமைத்ததுடன் மிகப்பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இதன் காரணமாக அமெரிக்காவில் நாளுக்குநாள் வேலை இழப்புகள் அதிகமாகி வருகின்றன. கொரோனாவால் வேலை இழந்தோருக்கு உதவ அரசு 2.3பில்லியன் அமெரிக்க டாலர் நிதி ஒதுக்கியது.

Trump

கொரோனாவால் வேலையிழந்தோருக்கு அரசு நிவாரணம் வழங்கிவந்த நிலையில், அந்த நிதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த கொரோனா நிவாரணத்தை 14 லட்சம் பேர் பெற்றுவந்தார். தற்போது இந்த நிதியின் கால வரையரை முடிவுக்கு வருவதாலும், ட்ரம்பின் ஆட்சிக்காலம் நிறைவடைவதாலும் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க நிதி நிலைமையை நன்கு கணக்கிட்டே இத்திட்டத்தை ரத்து செய்திருப்பதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

கொரோனாவால் உலகமே நிதி நெருக்கடியில் தவிக்கும் நிலையில், அமெரிக்க அரசும் தேவைகேற்ப செலவழிப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு நடுத்தர மக்கள் மட்டுமல்லாது ஜனநாயகக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

கொரோனா தாக்கத்தால் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலையின்மை காப்பீட்டு உதவித் தொகை பெற விண்ணப்பித்துள்ளது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே: 4 லட்சம் ரூபாய் டிப்ஸ் கொடுத்த பெண்! ஆனந்த கண்ணீரில் ஹோட்டல் ஊழியர்கள்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter