மிச்சிகன் மாநில ஆளுநரை கடத்த சதி திட்டம் தீட்டிய ட்ரம்ப்!

Michigan governor

ஜனநாயக கட்சியை சேர்ந்த கிரெட்சன் விட்மர், அமெரிக்காவின் மிச்சிகன் மாநில ஆளுநராக பதவி வகித்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர இவர் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். இதற்கு குடியரசு கட்சியினர், கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தச் சூழலில், விட்மரை கடத்த சதி திட்டம் தீட்டியதாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் Wolverine Watchmen என்ற கிளர்ச்சியாளர் குழுவை சேர்ந்தவர்கள்.

Trump

ஆளுநர் விட்மர் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை பெற்றிருப்பதால் அவரை கடத்தி பொதுவெளியில் விசாரணை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர். ஜூன் மாதம் ஓஹியோவில் சந்தித்த இவர்கள் விட்மரை கடத்துவது குறித்து கடந்த 2 மாதங்களாக ஒத்திகை பார்த்துள்ளனர். 200 பேருடன் ஆளுநர் மாளிகையில் நுழைந்து, அங்குள்ளவர்களை பிணை கைதியாக்கி விட்மரை கடத்துவது அல்லது விட்மர் வழக்கமாக விடுமுறையை கழிக்கும் வீட்டில் இருந்து கடத்துவது என முடிவு செய்துள்ளனர். நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கு முன்பாக இதனை நிறைவேற்ற திட்டமிட்டிருந்த நிலையில் ரகசிய உளவாளிகள் அளித்த தகவலின் மூலம் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சதித்திட்டத்தில் அதிபர் ட்ரம்புக்கும் தொடர்புள்ளதாக சாடியுள்ள விட்மர், வெறுப்பை தூண்டும் குழுக்களை ட்ரம்ப் கண்டிக்காமல் விட்டது ஏன் என வினவியுள்ளார். ஆனால், தன்னுடைய நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு விட்மரை காப்பாற்றி இருக்கிறது அவரோ அதற்கு நன்றி தெரிவிக்காமல் என்னையே சாடுகிறார் என ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: காணொலி விவாதத்தில் பங்கேற்க ட்ரம்ப் மறுப்பு!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

Related posts