ட்ரம்ப் மரணிக்க வேண்டும் என்று கோரும் ட்வீட்டுக்கள் நீக்கப்படும்: ட்விட்டர்

twitter

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மரணமடைய வேண்டும் என பதிவிடப்பட்டுள்ள ட்வீட்கள் உடனடியாக நீக்கப்படும் என ட்விட்டர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். வயதானவர் என்பதால் ஹை ரிஸ்க் பட்டியலில் ட்ரம்ப் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். ஒருநாள் மட்டுமே வீட்டில் தனிமையில் இருந்த ட்ரம்ப், மருத்துவர்களின் ஆலோசனைப்படி மேரிலாண்டில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு லேசாக காய்ச்சல் இருப்பதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், மற்றபடி அவர் நலமுடன் இருப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் அவரது மனைவி மெலானியா ட்ரம்புக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

trump

இந்நிலையில் நுரையீரலை தாக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் அதிபர் ட்ரம்ப் மரணமடைய வேண்டும் என ட்விட்டரில் சில விஷமிகள் பதிவிட்டு ட்ரெண்ட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையறிந்த ட்விட்டர் நிறுவனம், அதிபரின் மரணம் குறித்து, நோய் தொற்று குறித்த ட்விட்டர் பதிவுகள் நீக்கப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள ட்விட்டர் நிறுவனம், “ஒருவர் சாக வேண்டும் என்று விரும்பி கருத்து தெரிவிப்பதை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். அதே போல ஒருவர் மீதோ அல்லது ஒரு குழு மீதோ வன்முறை பிரயோகிக்க வேண்டும், நோய் வர வேண்டும் என்று கூறும் பதிவுகளையும் சகித்துக்கொள்ள மாட்டோம்” என தெரிவித்துள்ளது. அதேநேரம் ஃபேஸ்புக்கில் இப்படியான கருத்துகள் நீக்கப்படாது என்று தெரிகிறது. ஏனென்றால் ஃபேஸ்புக் விதிகளின் படி, ட்ரம்ப்பை டேக் செய்யாமல் இப்படிக் கருத்துப் பதிவிடுவது விதிமுறைக்குப் புறம்பாகாது.

இதையும் படிக்கலாமே:  ஹெச்1பி விசா: அதிபர் ட்ரம்பின் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter