நட்சத்திர ஹோட்டலின் வை-பை- யில் பாடம் படித்த சிறுவர்கள்!

Students

சீனாவின் வுகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்தே மீள முடியாமல் உலக நாடுகள் தவித்துவருகின்றன.

கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 63 லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது.

அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு சீனாவே காரணம் என்றும் வைரஸ் உருவான தகவலை சீனா மறைத்து விட்டதால் தான் இத்தனை உயிரிழப்புகள் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்.

இதனிடையே கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

ஆனாலும் ஆன்லைன் கல்வி அங்கு அனைவருக்கும் சாத்தியமற்ற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. என்னதான் வல்லரசு நாடாக இருந்தாலும் ஆன்லைன் கல்வியை பெற முடியாத சூழலில் அங்கு ஏராளமான குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள டாக்கோ பெல் எனும் நட்சத்திர ஹோட்டலின் வெளியே இரு சிறுவர்கள் சிறிய லேப்டாப்பை வைத்துக்கொண்டு ஹெட் போன் போட்டுக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

அந்த வழியாக செல்வோர் அந்த சிறுவர்களை வித்தியாசமாக பார்த்து சென்றனர். வழிப்போக்கர்களில் ஒருவர், ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினர். அப்போது நாங்கள் இருவரும் ஹோட்டலின் வைஃபையைப் பயன்படுத்தி படிப்பதாக பதிலளித்தனர்.

இதனை கேட்டு நெகிழ்ந்துப்போன அந்த வழிப்போக்கர் சிறுவர்களின் செயல்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த புகைப்படங்கள் தற்போது வைராகி எல்லோரும் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே: பிடனுக்கான இந்து அமெரிக்கர்கள்! வாக்குகளை கவர புதிய உத்தி

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa