அமெரிக்காவில் வரலாறு காணாத அளவிற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

u.s. economy

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் அமெரிக்காவில் வரலாறு காணாத அளவிற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றியமைத்ததுடன் மிகப்பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. இதன் காரணமாக அமெரிக்காவில் நாளுக்குநாள் வேலை இழப்புகள் அதிகமாகி வருகின்றன.

அதுமட்டுமின்றி ஏராளமான நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியை சமாளிக்கவும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசு 484 லட்சம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்திவருகிறது.

US-Economy

இந்நிலையில், அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் அதாவது 242 லட்சம் கோடி ரூபாயை அளவிற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் கடன் அளவும் அதிகரிக்கும் மாறாக உள்நாட்டு உற்பத்தி குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட கடன் அளவின் அளவிற்கு, தற்போதும் கடன் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சி.பி.ஓ., எனப்படும், காங்கிரஸ் சபைக்கான பட்ஜெட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், அடுத்த, 10 ஆண்டுகளில், 954 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படலாம் என்றும், கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறையை விட, தற்போது ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மூன்று மடங்கு அதிகமாகும். பொருளாதார மந்த நிலையால், நாட்டின் வரி வருவாயும், தனிநபர் வருமான வரியும், கார்ப்பரேட் வரியும் கணிசமாக குறைந்தது. மாறாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டின் கடன் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

இதையும் படிக்கலாமே: அமெரிக்க அதிபர் தேர்தலில் போலி வாக்களித்த இந்தியர்!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa