“ட்ரம்ப் பதவிக்காலம் ஓவர்”அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வலைதளத்தில் பதிவு

Trump

அதிபர் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸின் பதவிக்காலம் முடிந்துவிட்டது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் வலைதளத்தில் பதிவிட்டுவிட்டு அதனை நீக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்து வரும் ட்ரம்பும், அவரது ஆதரவாளர்களும் அத்துமீறி நாடாளுமன்ற கட்டத்துக்குள் நுழைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் 5 பேர் உயிர் இழந்தனர், மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த போராட்டம் ட்ரம்பின் தூண்டுதலால் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

US Elections 2020: Donald Trump's Campaign Website Briefly Defaced As  Hackers Had 'Enough of Fake News' | India.com

இதனால் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் பிரதிநிதிகள் சபையில் ட்ரம்பை பதவிநீக்க தீர்மானம் ஒன்றை கொண்டுவந்துள்ளன.

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பதவிக்காலம் முடிய இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில், அவரை பதவிநீக்கம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

ட்ரம்பை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்துள்ளனர்.

சொந்த கட்சியான குடியரசுக்கட்சியிலேயே ஒருசிலர் ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸின் பதவிக்காலம் 11 ஆம் தேதி மாலை 4 மணியுடன் முடிந்துவிட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.

அதன்பின் ஒரு சில நிமிடங்களில் அந்த பதிவு நீக்கப்பட்டது. அதிகாரப்பூர்வ பக்கம் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டதாகவும், அந்த பதிவை தாங்கள் பதிவிடவில்லை என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

இதையும் படிக்கலாமே: மாடர்னா நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி 94% பலன்.!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter