இந்திய நிறுவனத்துக்கு நிதிக்கொடுத்து உதவும் அமெரிக்க நிறுவனம்!

india- america

அமெரிக்காவை சேர்ந்த, டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்காக இந்திய நிறுவனத்திற்கு நிதி உதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது.

india- us relationship

கொரோனா பாதிப்பிலிருந்து தென் கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் மீண்ட நிலையில், அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

இந்தியாவைச் சேர்ந்த, பயோலாஜிக்கல் – இ என்ற நிறுவனம் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கு நிதி உதவியை வேண்டி நின்றது.

இதனை அறிந்த அமெரிக்காவைச் சேர்ந்த, ‘டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம், 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கு தேவையான நிதி உதவியை அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா கொரோனா தடுப்பூசி மருந்துகளின் தயாரிப்பை அதிகரிக்கும் நோக்கத்திற்காக நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி டேவிட் மார்க் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் தடுப்பூசி மருந்து செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிக்கும், கூடுதலாக நிறைய பேருக்கு கொரோனா தடுப்பூசி போட உதவ முடியும் என டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

கொரோனா என்று வரும்போது அனைத்து நாடுகளும் எவ்வித பாகுபாடும் காட்டாமல் நிதியுதவி வழங்கி வருகிறது.