ஏர் இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி?

air india

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி முதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ‘வந்தேபாரத்’ திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் உள்ள இந்தியரை அழைத்து வர, சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மே-25 முதல், உள்நாட்டு விமான போக்குவரத்து, சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டது. இதையடுத்து 3 மாதங்களுக்கு மேல் அமெரிக்காவில் நிறுத்தப்பட்ட, சர்வதேச விமான போக்குவரத்து கடந்த ஜூலை 17 ஆம் தேதி தொடங்கியது.

டெல்லி – நியூயார்க் இடையே, தினசரி சேவையும், டெல்லி – சான்பிரான்சிஸ்கோ இடையே, வாரம் 3 முறையும் விமான போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க விமான நிலையங்களில், ஏர் இந்தியா அதன் விமான பராமரிப்பு பணிகளை, அந்நிறுவனமே கையாள்வதற்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை நீக்க மத்திய அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது.

இதற்காகவே வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் தவிக்கும் இந்தியர்களை மீட்க அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா விமானத்தை அனுப்பியது.

இந்நிலையில் அமெரிக்காவிற்குள் ஏர் இந்தியா நிறுவனத்தை அனுமதிப்பது தொடர்பாக பொதுமக்கள், விமான நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கலாம் என்றும், 21 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்றும் அமெரிக்க போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், ஏர் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிற்கு அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா விமானம் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஏர் இந்தியாவுக்கு ஆதரவாக பிற விமான நிறுவனங்கள் சாதகமாக கருத்து தெரிவிக்குமா என்பது கேள்விக்குறியே என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: உலக சுகாதார நிறுவனத்தை ஏமாற்றும் அமெரிக்கா!

அமெரிக்க செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

FB Page
http://- https://www.facebook.com/tamilmicsetusa

FB Group
– https://www.facebook.com/groups/usatamilnews/

Twitter
https://twitter.com/tamilmicsetusa