பாகிஸ்தான் சர்வதேச விமானங்களுக்கு அமெரிக்கா தடை

பாகிஸ்தான் சர்வதேச விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தான் விமான சேவையில் பணியாற்றும் விமானிகள், விமான ஓட்டுநர் உரிமம் தொடர்பான முறைகேடுகளில் ஈடுபட்டதை அந்நாட்டு அரசு அண்மையில் கண்டறிந்தது. பாகிஸ்தான் விமானிகளில் மூன்றில் ஒரு பங்கினர் விமானத்தை இயக்க தகுதியில்லாதவர்கள் என்றும், முறைகேடான முறையில் தேர்ச்சியடைந்தவர்கள் என்றும் பாகிஸ்தான் அரசு நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

PIA

இதையடுத்து, பாகிஸ்தான் விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஆறு மாதம் தடை விதித்தது. இந்நிலையில், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான சேவை அமெரிக்காவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.