ட்ரம்புக்கு ஆதரவாக இந்தியர்களும் இருக்கின்றன! அமெரிக்க கலவரத்தில் இந்திய தேசிய கொடி

Vincent Xavier

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதை ஏற்க மறுத்து வரும் ட்ரம்பும், அவரது ஆதரவாளர்களும் அத்துமீறி நாடாளுமன்ற கட்டத்துக்குள் நுழைத்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் 5 பேர் உயிர் இழந்தனர், மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த போராட்டத்தில் அமெரிக்க கொடிகளுக்கு மத்தியில் இந்திய தேசிய கொடியை பிடித்து ஒருவர் போராட்டத்தில் பங்கேற்றார்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் நேற்று வைரலானது.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராடிய போது இந்திய தேசியக் கொடியை ஏந்தி வந்தவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட வின்சென்ட் சேவியர் என்பவர் எனத் தெரியவந்துள்ளது.

ட்ரம்ப் ஆதரவாளர்களின் பேரணிகளில் “நிறைய தேசப்பற்று உற்சாகம்” இருப்பதால் தான் அதில் பங்கேற்றதாக சேவியர் தெரிவித்திருக்கிறார்.

US Capitol violence: Complaint filed in Delhi against Vincent Xavier who waved Indian flag

ஒரு சில மோசமான பேர்வழிகள் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலக அரங்கில் சித்தரிக்கப்படுவது போன்று “அமெரிக்கா இனவெறி பிடித்த நாடு அல்ல” என்பதை நிரூபிப்பதும், பன்முகத்தன்மையை தழுவுவதும் தனது நோக்கமாகும் என்று வின்சென்ட் சேவியர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் விசுவாசி எனக் கூறியிருக்கும் வின்சென்ட் சேவியர், குடியரசுக் கட்சி வெள்ளை மேலாதிக்கவாதிகளின் கட்சி அல்ல என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ட்ரம்ப் ஆதரவாளர்களின் பேரணியில் பங்கேற்றதாகவும் தெரிவித்தார்.

டிரம்பிற்கு ஆதரவாக இந்தியர்களும் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டவே அந்த போராட்டத்தில் அமைதியான முறையில் மூவர்ண கொடி உடன் பங்கேற்றேதாகவும் சேவியர் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே: பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா ட்ரம்ப்?

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter