கருப்பினர் ஜார்ஜ் ஃபிளாய்ட் குடும்பத்துக்கு $27 மில்லியன் நஷ்ட ஈடு

Police attack

அமெரிக்காவின் மின்னபோலிஸ் நகரில் கடந்த மே 25 ஆம் தேதி கருப்பின இளைஞர் ஜார்ஜ் ஃபிளாய்ட் காவலர்களால் கொல்லப்பட்டதை கண்டித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்றன.

அப்போது காவலர்கள் கருப்பினத்தவர்களிடம் கொடூரமாக நடந்துகொள்வதாகவும், இனவெறி மற்றும் மதவெறியை வெளிகாட்டுவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்ற பிளாக் லைவ் மேட்டர்ஸ் போராட்டத்தால் அமெரிக்காவே ஸ்தம்பித்தது.

ஜார்ஜ் பிளாயிட்  காவலர்களால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கறுப்பினத்தவரின் வாழ்க்கை மற்றும் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பிளாக் லைவ்ஸ் மேட்டர்ஸ் (BLACK LIVES MATTERS) வாசகம் வலுப்பெற்றது.

ஜார்ஜ் பிளாய்ட் உயிரிழப்பு; கலைக்கப்படும் மின்னபொலிஸ் காவல்துறை|  Minneapolis police dept to be dismantled over George Floyd's death |  Dinamalar

இதனையடுத்து ஜார்ஜ் பிளாயிட்டை கொலை செய்த காவல் அதிகாரி டெரக் சவின் பணிநீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை வழக்கில் டெரக் சவின் என்ற காவலரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கூடுதலாக மூன்று போலீசார் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறப்புக்கு பின்பு இது தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்தது. ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜார்ஜின் மரணத்துக்கு மினியாபோலிஸ் நகர அரசு 27 மில்லியன் டாலர் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

ஜார்ஜின் குடும்பத்தின் வழக்கறிஞரான பெஞ்சமின் க்ரம்ப், இந்த செட்டில்மென்ட் அமெரிக்க வரலாற்றில் ஒரு தவறான மரண வழக்கின் விசாரணைக்கு கிடைத்த தீர்வு என்று கூறினார்.

வரலாற்றிலேயே ஒரு குடும்பத்தினருக்கு கிடைத்த மிகப்பெரிய நிவாரணத்தொகை இதுவே என்பது குறிப்பிடதக்கது.