அமெரிக்காவில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு கொரோனா!

coronavirus

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக பதிவாகி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கபட்ட வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிகரித்துவரும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. கடந்த ஒருவாரமாக அங்கு தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

Corona Patients

இந்நிலையில் அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 2,01,961 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,535பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,39,588 ஆக அதிகரித்துள்ளது. அங்குள்ள பல மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பியதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. கொரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: கமலா ஹாரிசை தமிழகத்துக்கு அழைக்கும் மக்கள்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

Related posts