அமெரிக்காவில் ஒரே நாளில் 1,94,000 பேருக்கு கொரோனா

Corona Patients

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கபட்ட வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதிகரித்துவரும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. கடந்த ஒருவாரமாக அங்கு தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

corona vaccine

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,94,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 82,000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு இந்த வாரம் 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. நியூயார்க், கலிப்போர்னியா போன்ற மாகாணங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், ஜூலை மாதத்துக்குப் பிறகு அமெரிக்காவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றின் இரண்டாவது கட்ட அலை பரவியது போன்று, தற்போது நாள்தோறும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய மருத்துவ வல்லுநர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

அமெரிக்காவில் இதுவரை ஒரு கோடியே 22 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் 2 லட்சத்து 60 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே: கமலா ஹாரிசை தமிழகத்துக்கு அழைக்கும் மக்கள்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter

Related posts