ஒரே நாளில் 2.30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு; 2,600 பேர் உயிரிழப்பு

coronavirus

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை. இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாகவே நாட்டின் தினசரி பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 600 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,85,656 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்று ஒரேநாளில் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அங்கு இதுவரை ஒரு கோடி 47லட்சத்து 74ஆயிரத்து 167 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Coronavirus

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 86லட்சத்து 63 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்புக்கு தற்போது 58 லட்சத்து 24 ஆயிரத்து 908 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அவா்களில் 26,153 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதத்திற்குள் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பின் எண்ணிக்கை 4 லட்சத்து50,000 ஐ எட்டும் என்றும் இந்த குளிர்காலம் பொது சுகாதார வரலாற்றில் மிகவும் கடினமான நேரம் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் ராபர்ட் ரெட்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே: அமெரிக்காவின் தலைமை மருத்துவ அதிகாரியாகும் இந்திய வம்சாவளி

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter