ஒரே நாளில் 3,927 பேர் கொரோனாவால் உயிரிழப்பு!

us corona

“கொரோனா வைரஸ்” உலகத்தையே அச்சத்தில் உறைய வைத்திருக்கும் வார்த்தை.

இதன் பிறப்பிடம் சீனா என்றாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களின் பழக்கவழக்கங்களை மாற்றி, மாஸ்க் அணிந்து, சமூக இடைவெளியுடன் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கபட்ட வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

corona vaccine

அதிகரித்துவரும் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. கடந்த ஒருவாரமாக அங்கு தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,927 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். இதன்மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,41, 845 ஆக அதிகரித்துள்ளது.

ஒரு கோடியே 97 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உருமாறிய கொரோனாவும் அமெரிக்காவுக்குள் அடியெடுத்து வைத்திருப்பதால் வரும் நாட்களில் அங்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சியாக அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி முழு மூச்சில் நடைபெற்றுவருகிறது.

இதையும் படிக்கலாமே: கமலா ஹாரிசை தமிழகத்துக்கு அழைக்கும் மக்கள்!

அமெரிக்கா தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள் எங்களுடன்…

Facebook

FB Group

Twitter